26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.

கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள் ஆதங்கப்பட்டனர். எனவே இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் மறியல் செய்தனர். இந்த வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.

பிரதான சாலை என்பதால் இந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மீனவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்காவிட்டால் ரேசன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று ஆவேசமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு

தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஜாமிஆ மஸ்ஜித் லைலத்துல் கதர் நிகழ்ச்சி நிரல்..

Leave a Comment