தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நாளை (சனிக்கிழமை – 11/12/2021) நடைபெறுகிறது. அதன் வகையில், கோட்டக்குப்பம் பகுதியில் மொத்தம் 10 இடங்களில்,. காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:
- அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
- பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
- சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
- அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
- அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
- அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
- அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
- அரசு துவக்கப்பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
- முன்னாள் தலைவர் வீடு, ரஹமத் நகர்.
இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்(Health inspector).