23.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து கடந்த 11.6.1996 அன்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த நவம்பர் 1-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், கடந்த 7-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.

இதன் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், விரிவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் புதிய நகராட்சிகளுக்கு கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்படி தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற நகராட்சிகளை பொறுத்தவரை, உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி, லால்குடி, முசிறி, புகளூர் ஆகிய நகராட்சிகளுக்கு 24 கவுன்சிலர்கள்; சுரண்டை, களக்காடு, திருக்கோவிலூர், மாங்காடு, சோளிங்கர், பொன்னேரி, திருநின்றவூர், வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி, மானாமதுரை, தாரமங்கலம், இடங்கனாசாலை ஆகிய நகராட்சிகளுக்கு 27 கவுன்சிலர்கள்;

குன்றத்தூர், கூடுவாஞ்சேரி-நந்திவரம் நகராட்சிகளுக்கு 30 கவுன்சிலர்கள், கொல்லங்கோடு நகராட்சிக்கு அதிகபட்சமாக 33 கவுன்சிலர்கள் என எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டதிலுள்ள புதியதாக நிலை உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ வரைவு வார்டு மறுவரையறை கருத்துகளின் மீது பொதுமக்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ ஆட்சேபனைகள்/கருத்துக்கள் ஏதும் இருப்பின்‌ 24/12/2021 அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ தெரிவித்திடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – புதுவை முதல்வரிடம் மனு.

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் அதிரடி: மக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment