34.2 C
கோட்டக்குப்பம்
April 8, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா.

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு, அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று கோட்டக்குப்பம் உமர் மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர்கள் பேரவையின் மாவட்ட தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க, செயலாளர் அப்துல் ரவூப் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்க, பொருளாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க, சங்க கவுரவத் தலைவர் சாகுல் ஹமீது, சங்க செய்தியாளர் அமீர் பாஷா, சங்க சட்ட ஆலோசகர் அறிவழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க மற்றும் ஜாமியா மஸ்ஜித் முன்னால் முத்தவல்லி இஹ்சானுல்லாஹ், பக்ருதீன் பாரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சங்கத்தின் 2022-ஆம் ஆண்டில் காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இறுதியில் சங்க துணைச் செயலாளர் முகமது பிலால் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் உயர்மட்ட குழுவினர், ஆலோசனைக் குழுவினர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

டைம்ஸ் குழு

சின்ன கோட்டகுப்பத்தில் கொரோனா தொற்று..

கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment