29.2 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு: தூண்டில் வளைவு அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியல்

சின்னமுதலியார் சாவடியில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் நீண்ட நாட்களாக தங்களது கிராமத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர். கடல் சீற்றம் அதிகமாக ஏற்படும் காலங்களில் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுவதால், தங்களால் கடலோரத்தில் வசிக்க முடியவில்லை, எனவே இதனை தடுக்கும் பொருட்டு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலவருடமாக போராடி வருகிறார்கள். இருந்த போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அக்கிராமத்தை  சேர்ந்த மீனவர் மூர்த்தி உட்பட சக மீனவர்கள் என 4 பேர் படகில் இன்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் கடலுக்குள் விழுந்த நிலையில், 3 மீனவர்கள் நீந்தி கரை வந்தனர். ஆனால், மீனவர் மூர்த்தி மட்டும் கடலில் சிக்கி இறந்துவிட்டார். இது குறித்து தகவலறிந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவ மக்கள் மூர்த்தியின் சடலத்தை மீட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் செல்வது வழக்கம், அதனடிப்படையில் அதிகாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, பணிக்குச் செல்வோர் வாகனம், சென்னைக்குச் செல்லும் பேருந்துகளும் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து இருபுறமும் பாதிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 161 பேர் வேட்புமனு தாக்கல்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகரில் குடிநீர் தண்ணீர் சீராக்கக்கோரி பேரூராட்சி அலுவலரிடம் மனு

கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி.

Leave a Comment