29.2 C
கோட்டக்குப்பம்
November 23, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் மனு தாக்கல்; சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்.

கோட்டக்குப்பம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு சரியான வழி முறைகளை அதிகாரிகள் கூறாததால் வேட்பு மனு தாக்கல் குறித்த விபரம் கேட்கச் சென்ற வேட்பாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோட்டக்குப்பம் நகராட்சியில் முதல் முறையாக 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது.50க்கும் மேற்பட்டோர் தங்கள் வசிக்கும் பகுதி எந்த வார்டு மற்றும் ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது என தெரிந்து கொள்ளவும், வேட்பு மனு தாக்கல் விபரங்கள் குறித்து அறியவும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான வழி முறைகள் தகவல் பலகையில் சரியான முறையில் இல்லாததால், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் அதிகாரிகளிடம் அதற்கான தகவல்களை கேட்டனர்.

அதிகாரிகளுக்கு எந்ததந்த பகுதி எந்த வார்டுகளின் கீழ் வருகிறது என்ற விபரங்கள் தெரியவில்லை. இதனால், விபரம் கேட்டவர்களிடம் மழுப்பினர். நகராட்சி கமிஷனர் பானுமதியை சந்திக்க சில வேட்பாளர்கள் சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் அனுமதி தர மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு தாக்கல் குறித்த விபரம் தெரியால் திரும்பிச் சென்றனர்.

News Credit: Dinamalar.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment