தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்கள் ஆகி விட்டன. இதுவரை, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்றைய (31-01-2022) தினத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன், விபரங்கள் பின்வருமாறு:
சுயேட்சை – 5
திராவிட முன்னேற்றக் கழகம் – 1
எஸ்.டி.பி.ஐ – 1
மொத்தம் 7
இன்னும் மனுத்தாக்கல் செய்ய 4 நாட்கள் இருக்கும் நிலையில், நாளை மறுநாள் அதாவது புதன்கிழமை அதிகப்படியாக வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.