நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய தினத்திற்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 161 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று (7 ம் தேதி) காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. இதில் 16 வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதனால் 145 வேட்பாளர்களாக குறைத்து, இதில் 69 ஆண் வேட்பாளரரும் மற்றும் 76 பெண் வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். மேலும், இன்று மதியம் 3- மணி மேல் இறுதி வேட்பாளர் பட்டியல், மற்றும் சுயட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.