நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டகுப்பம் நகராட்சி 27 வார்டுகளிலும் கடந்த 10 நாட்களாக தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் என்பதால் அனைத்து கட்சியினரும் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் சின்னங்களுக்கு வாக்கு கேட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
524 ஓட்டுகள் உள்ள 12வது வார்டில் மட்டும் தி.மு.க., – அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பா.ம.க., மற்றும் 6 சுயேச்சைகள் என 10 பேர் போட்டியிடுகின்றனர். அதிக வேட்பாளர்கள் நிற்பதாலும், பிரதான கட்சி வேட்பாளர்களும், களத்தில் உள்ளதாலும் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதனால் அந்த வார்டில் வெற்றி தோல்வியை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களுக்கென தனி திட்டங்களை வகுத்து, அதற்கேற்றார்போல் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
18-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ஹாஜா பீவி அவர்கள் தமது வார்டை ஸ்மார்ட் வார்டாக மாற்றுவேன் என்று கூறி இன்று வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
17-வார்டில் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிடும் Y. ரஹ்மதுல்லா B.A., அவர்கள் தனது அறிக்கையை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைத்தார்.
அதேபோல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் இறுதி நாள் என்பதால் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.