34.2 C
கோட்டக்குப்பம்
April 8, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை.

கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதால், வரும் 26, 27ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.

கொரோனா பரவலை தடுக்க, ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு செப்., துவங்கி, கடந்த 12ம் தேதி வரை, 23 மெகா முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 19ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம், 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.

சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘வரும் 27ம் தேதி, ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. அதே நாளில், தடுப்பூசி முகாம் நடத்துவது இயலாது. இதனால், வரும் 26, 27 ஆகிய தேதிகளில், மெகா தடுப்பூசி முகாம் நடக்காது’ என்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்..

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment