கோட்டக்குப்பம் ஒருங்கிணைத்த பொதுநல சங்கம் (KISWA) மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்காக இலவச மருத்துவ முகாம் இன்று (4/3/2022) மாலை 5 மணி அளவில், ரவ்னகுல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற்றது.
கிஸ்வா சங்க துணை தலைவர் I முகமது முபாரக் தலைமை தாங்கினார், அப்துல் ரவூப் வரவேற்றார். I. அப்துல் ஹக்கீம் என்னும் முஜிப், ஹாதர் பாஷா, K. நஜீர், அஜீஸ், இலியாஸ், முபாரக், ஜியாவுல் ஹக், சுலைமான், ஜின்னா, ரகீப், ஃபரா, ரஹீம், மலிக், பைவ் ஸ்டார் நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் துணை முத்தவல்லி அப்துல் ரவூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U. முஹம்மது பாரூக் தொடங்கி வைத்தார். முதன்மை மருத்துவர் டாக்டர். ஆகாஷ் தலைமையில் 8 டாக்டர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்கினார்.
முகாமில் பெண்கள், குழைந்தைகள், எலும்பு முறிவு, ENT மருத்துவம் போன்ற பல தரப்பட்ட நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 88 நபர்கள் பயன்பெற்று, 7 நபர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை மற்றும் உயர்தர அறுவை சிகிச்சைகள் செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை கிஸ்வா உறுபினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.