கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் ரப்பானியா அரபிக்கல்லூரியின் உயர்மட்ட குழு தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்க, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஓ. அசரப் அலி, எஸ். ஷபியுல்லா, ஹாஜி Y. இஹ்சானுல்லாஹ், முன்னாள் செயலாளர் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்க, செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி கமால் முஸ்தபா ஆண்டறிக்கை வாசிக்க, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் உலமா பெருமக்கள், ரப்பானியா ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை ரப்பானிய்யா பேராசிரியர் சர்தார் ஹஜ்ரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இறுதியில் செயற்குழு உறுப்பினர் முகமது அவர்கள் நன்றியுரை கூற ரப்பானிய்யா பேராசிரியர் அபுதாஹிர் ரஷாதி ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் தாய்மார்கள், பெரியவர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த ஜமாத்தார்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.