27.1 C
கோட்டக்குப்பம்
April 17, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

உலக தண்ணீர் தினம்: கோட்டக்குப்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உலக தண்ணீர் தினம் இன்று (22.03.2022) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் இன்று கோட்டகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உயர் கல்வி ஆலோசகர் பேராசிரியர் முகமது இஸ்மாயில் அவர்கள் மாணவர்களுக்கு தண்ணீர் சேமிப்பை குறித்து உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு வானூர் வருவாய் வட்டாட்சியர் திரு. உமாமகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், முதல் உதவி பயிற்சியாளர் தண்டபாணி அவர்கள் கோட்டக்குப்பம் நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி, அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ரெட் கிராஸ் கிளை நிர்வாகிகள் அப்துல் ரஷீத், பயாஸ், காதர், யாசின், உமா மகேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் அதிரடி: மக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment