தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் முடிவுகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது.
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த 2-ந்தேதி பதிவி ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 4-ந்தேதி கோட்டக்குப்பம் நகராட்சி முதல் சேர்மனாக எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும் துணைதலைவராக ஜீனத் பிவி முபாரக் அவர்கள் தேர்த்து எடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நிலைக்குழு, வார்டுகள் குழு, நியமனக்குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 30, 31-ந்தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சியின் நியமனக் குழு, ஒப்பந்தக்குழு மற்றும் வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விபரம் பின்வருமாறு,