தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்ததை முன்னிட்டு இன்று (24-04-2022) கோட்டகுப்பம், பரகத் நகர் அங்கன்வாடி மையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாசர் அலி அவர்கள் தலைமையிலும், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முகமது அவர்கள் முன்னிலையிலும், KIWS சங்க நிர்வாகிகள் ரியாஜ் குழுவினர் மற்றும் பரகத் நகர் வாசிகள் யஹ்யா, கமால், பைசல் உள்ளிட்ட பலரின் பங்கோற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தீர்மானங்களாக கருவுற்ற பெண்கள் தங்களை 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் பதிந்து கொள்ள வேண்டும் என்றும்,
அவர்களுக்கு முறையான உணவு முறைவழிகட்டுதல்கள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முறையான உணவு வழிகாட்டுதல்களும், மாத்திரைகள், தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு வருவதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பள்ளிவாசல் மற்றும் பொது அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அங்கன்வாடி மையத்தை சுகாதார முறையில் தொடர்ந்து பாதுகாப்பது என்றும், அங்கன்வாடி மையத்திற்கு தண்ணீர் தொட்டி அமைக்க ஆவணம் செய்வது என்றும், அங்கன்வாடி மையத்தில் மின்சார வரி கட்டுவதை ஒழுங்குபடுத்துவது என்றும், பருவமடைந்த பெண்களுக்கான சத்து மாத்திரைகள், சத்து மாவுகள் சரியாக வினியோகிப்பது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்து பெற அவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பணிகளை அங்கன்வாடி பொறுப்பாளர்களுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொது நல சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவது பற்றியும் பேசப்பட்டது.
இறுதியில் அனைவருக்கும் அங்கன்வாடி பொறுப்பாளர் நன்றி கூறினார்.