கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பாக ஏழைகளுக்கான ஜகாத் பொருள் மற்றும் ரொக்கம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், நேற்று 27-04-2022 புதன்கிழமை, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் அருகில் ரப்பானியா கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் வாஹித் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார், அதைத்தொடர்ந்து ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் புகாரி ஹஜ்ரத் அவர்கள் சமுதாய ஒற்றுமையை பற்றி சிற்றுரை ஆற்றினார். முன்னால் பேருராட்சி தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜகாத் பொருள் மற்றும் தொகை வழங்கினார்.
ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக், துனை முத்தவல்லி அப்துல் ரவூப், முன்னால் முத்தவல்லி இஹ்சானுல்லா, முன்னால் முத்தவல்லி பக்ருதீன் பாரூக், முன்னால் கவுன்சிலர் நஜீர், புஸ்தானிய்யா பள்ளிவாசல் நிர்வாகி பஜ்லுதீன், பர்கத்நகர் பள்ளிவாசல் செயலாளர் நாசர், ரஹ்மத் நகர் முத்தவல்லி அன்சாரி, முன்னால் ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் சாதிக் அலி, அனைவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து ஜகாத்தை விநியோகம் செய்தனர்.
இந்நிகழ்சியை கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் கொளரவத்தலைவர் பஜ்லுர் ரஹ்மான், சங்கத்தலைவர் நஜீர் (எ) பாரூக், செயலாளர் சிபைதுல்லா, பொருளாலர் ரியாஜ் (எ) அப்துல் மஜீத் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சாதிக், அனீஸ், ஷரீஃப், செயது, சுலைமான், ஹிதாயத்துல்லா, அசாருதீன், இவர்களின் முயற்ச்சியில் ஜமாத் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை ஒருங்கினைத்து ஜகாத் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது.