கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சி இன்று(31/05/2022) மாலை 5 மணிக்கு கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நுழைவாயில் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் முக்கியத்தை குறித்து ரெட் கிராஸ் உறுப்பினர் ரியாஸ் விளக்கினார். கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராபின்சன் அவர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை தடை சட்டம் குறித்தும் பள்ளி கல்லூரி அருகில் சிகரெட் விற்பனை செய்தால் தண்டனை சட்டம் குறித்தும் பொதுமக்களுக்கும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
கோட்டக்குப்பம் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்க நிர்வாகி முஹம்மத் இலியாஸ் புற்றுநோய் குறித்து அறிவுரை வழங்கினார். புகையிலை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர்.
இறுதியில் ரெட் கிராஸ் சேர்மன் அப்துல் ரஷீத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ரெட்கிராஸ் பொருளாளர் ஹலில் பயாஸ் , நிர்வாகிகள் உமா மகேஸ்வரி ,காதர், ரவி ,யாசின், மஸ்தான் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் நகரமன்ற உறுப்பினர்கள் நாசர் அலி, அனஸ், ரஹ்மத்துல்லாஹ், சாதிக், ஃபக்ரூதீன், புதுச்சேரி ரெட் கிராஸ் சேர்மேன் லட்சிமிபதி, ஐய்யனார் மற்றும் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஊழியர்கள், கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியர்கள், கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.