சின்ன கோட்டக்குப்பம் தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி சார்பாக முப்பெரும் விழா தொடங்கியது. இதன் முதல் கட்டமாக இஸ்லாமிய கண்காட்சி இன்று காலை(03/06/2022) ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.
கண்காட்சியில் தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் இஸ்லாத்தின் வரலாறு, மண்ணறை விளக்கம், ஹலால் ஹராம் உணவு வகைகள், நபிகளின் வரலாறு, குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள், ஐம்பெருங் கடமைகள், மக்கா, மதீனா, தவ்ர் குகை உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய மார்க்க வரலாற்றுச் சம்பவங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காட்சியில் மாணவிகள் தங்களின் ஆக்கங்கள்களை அழகிய முறையில் மக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த கண்காட்சியானது, இன்று காலை 10 மணி முதல் இஷா வரை பெண்களுக்கும் மற்றும் நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி நிர்வாகிகள் செய்திருந்தார். மேலும், இந்த கண்காட்சியை கோட்டக்குப்பம் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளித்து பயன்பெற வேண்டும் என கல்லூரியின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.