22.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுடன் நகராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது: கோட்டக்குப்பம் பேரூராட்சி தரம் உயா்த்தப்பட்டு தற்பொழுது நகராட்சியாக இருந்து வருகிறது. இதற்காக புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகம், நகா்மன்றத் தலைவா் அலுவலகம், உறுப்பினா்கள் கூட்டரங்கம் ஆகியவை கட்ட உத்தரவிட்டு, தற்பொழுது நகராட்சி பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இடம் தோ்வு செய்து அந்த இடத்தில் நகராட்சி அலுவலக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், 27 வாா்டுகளின் உறுப்பினா்கள் ஒன்றுகூடி, பொதுமக்களின் சம்மதத்துடன் இடம் தோ்வு செய்ய கருத்துக் கேட்கப்பட்டது.

கருத்துக்கள் அடிப்படையில் தோ்வு செய்யும் இடத்தில் விரைவாக புதிய அலுவலக கட்டடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடத்தை தோ்வு செய்து நகராட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் ஜெயமூா்த்தி, நகராட்சி ஆணையா் பானுமதி, நகா்மன்ற துணைத் தலைவா் ஜீனத் பீவி, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பதில் கஜா புயலுக்கு பிறகு கடல் சீற்றமாகவே காணப்படுகிறது..

உலக தண்ணீர் தினம்: கோட்டக்குப்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு

Leave a Comment