கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, புதியதாக உருவாகும் ரேஷன் கடையை பெரிய தெருவில் இருக்கும் நகராட்சி கடையில் அமைக்க கோரி 16-வது, 17-வது மற்றும் 18-வது வார்டு கவுன்சிலர்கள் கூட்டாக நகர்மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி அவர்களிடம் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
“கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்றாம் எண் ரேசன் கடையில் 1515 குடும்ப அட்டைகள் மேல் உள்ளதை இரண்டு கடைகளாக பிரிக்க வேண்டி பல வருடங்களாக மக்கள் கோரி வருகின்றனர். அதன் அடிப்படையில் அரசும் அந்த கடையை இரண்டாக பிரிக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க துவங்கி இருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாங்கள் எங்கள் வார்டுகளில் உள்ள குடும்ப அட்டைகளில் விவரங்களை சேகரித்து வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்க்கு கொடுத்து உள்ளோம். தற்போது தற்காலியகமாக ரேசன் கடை அமைக்க பெரிய தெருவில் அமைந்து இருக்கும் இரண்டு நகராட்சி கடைகளை வழங்கி மக்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்”, என குறிப்பிடப்பட்டுள்ளது.