April 14, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம்

கோட்டகுப்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடைகளும், வணிக வளாகங்கள், அரசியல் பேனர்களும், செடி மரங்கள் என அடிக்கடி மர்மமான முறையில் தீப்பற்றி எரிகின்றன.

பக்ரீத் தினமான நேற்று(10/07/2022) இரவு சுமார் 12 மணி அளவில் கோட்டக்குப்பம் எம். ஜி ரோட்டில் அமைந்துள்ள நஜிர் டிரேடர்ஸ் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை முழுவதுமாக அணைத்துள்ளார். இதனால், அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுவரை தீ வைக்கும் மர்ம நபர்கள் அகப்படவில்லை. ஊரின் அமைதியை நிலைநாட்ட இந்த மர்ம நபர்களை உடனடியாக காவல்துறை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் ஏழைகளுக்கான ஜகாத் பொருள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவு.

Leave a Comment