கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று மாலை ஆரோவில் கடற்கரை மற்றும் தந்திராயன்குப்பம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 100 மீட்டர் உள்வாங்கியது.அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.இதனையறிந்த போலீசார், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை விதித்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பருவநிலை மாற்றம் எதுவும் நிகழாமல் இருக்கும் காலத்தில் இப்படி திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.