1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாஹுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள், “நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மூவர்ணக் கொடியை ஏற்றிய அறிவு மையம் அஞ்சுமன். தொடர்ந்து பல வருடங்களாக தேசியக் கொடியை ஏற்றுவதும் சுதந்திரத்தை நெஞ்சுக்கு நெருக்கமானதாகவும் கொண்டாடுவதும் பல்வேறு இஸ்லாமிய மத நிறுவனங்களின் பணி. அஞ்சுமனின் அந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும்” என கூறினார்.
நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.