தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களும், மேற்சொல்லப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் தங்கள் வருகையை அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிகள்:
- UPSC சிவில் சர்விஸ் IAS
- மத்திய அரசின் SSC
- தமிழக அரசின் TNPSC – Group I,II,III, IV & VAO
*முமு நேரம் மற்றும் பகுதி நேரம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல் போது கொண்டு வர வேண்டியவை:
- ஆதார் அட்டை நகல்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- 10th, 12th மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் .
- கல்லூரி பயிலும் மாணவர்கள் அடையாள அட்டை(ID Card).
மிகவும் குறைந்த கட்டணமாக ஆண்டுக்கு ₹5,000 கட்டமாக பெறப்பட்ட, இந்த பயிற்சியை முழுமையாக வருகை புரிந்து சிறப்பான முறையில் பயிற்சி நிறைவு செய்தவர்கள் முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். முதல் தவணையாக, நேர்காணல் அன்று ₹2,000 செலுத்தி தங்கள் சேர்க்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நீங்களும் அரசு அதிகாரிகளாக உருவாக, இந்த அறிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.