மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது, கோட்டக்குப்பம் நகராட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தனியாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், கோட்டக்குப்பம் நகரம் முழுவதும் புதைவிட மின்சார கேபிள்(Under ground cable) அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டக்குப்பம் மின்வாரிய அலுவலகம் எதிரில் வட்டக்குழு உறுப்பினர் கோட்டக்குப்பம் நகர செயலாளர் முகமது அனஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டனம் முழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், சே. அறிவழகன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், அன்சாரி, ஐ. சேகர் கோட்டக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் மு. ஃபர்கத் சுல்தானா உட்பட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.