புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
மருத்துவமனைக்கு வருபவர்களில் 50% பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.