கோட்டக்குப்பம் நகராட்சியில் உயர் கோபுர மின் விளக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று(28/09/2022) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான 2-வது வார்டு, 13-வது வார்டு, 17-வது வார்டு மற்றும் 26-வது வார்டு ஆகிய நான்கு வார்டுகளில் உயர்மின் கோபுர விளக்கு (ஹைமாஸ் விளக்கு) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி, துணை தலைவர் திருமதி ஜீனத் பி முபாரக், 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ் ஜெயஸ்ரீ சுகுமார், 2-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலா மணிகண்டன், 17 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹமதுல்லா மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் உயர்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.