30.2 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(06/11/2022) மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் விழுப்புரம் மாவட்ட மாநில இணைச் செயலாளர் மோகன் அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சுசிந்திரன் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்தை அமைத்துக் கொடுத்து சிறப்புரையாற்றினார்கள்.

சங்கத்தின் தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக அன்சர் பாஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக முஹம்மது வக்கீல், பொருளாளராக கமால் ஹசேன், இணைச் செயலாளராக சாகுல் அமீது தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்கள் ஹலில் பயாஸ், கதிர்வேல் செட்டியார், முகமது இலியாஸ், ஹமீது அத்தாவுள்ள, முஹம்மது பாரூக் , சவுரிராஜன் ஆகியிரும், துணை செயலாளராக பாபு என்கிற பக்ருதீன், முகமது இலியாஸ், சபீர் அகமது, துபையில் அகமது, தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • புதிய தீர்மானங்களாக சங்கத்தின் சார்பில் அனைத்து வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்றாம் கண் சிசிடிவி கேமரா மூன்றாம் கட்டமாக மகாத்மா காந்தி வீதி எம்.ஜி ரோட்டில் முழுமையாக அமைக்கப்படும்.
  • வியாபாரிகளுக்காக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் முறையாக மனு அளித்து வியாபாரிகளுக்காக பொது கழிப்பிடம் & வாடிக்கையாளர்கள் பயன்படக்கூடிய பேருந்து நிழல்குடை கட்ட முறையிடப்படும்.
  • உரிய அனுமதியின்றி உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கக்கூடிய நடமாடும் வெளியூர் வாகன வியாபாரிகளை அனுமதிக்க கூடாது என்று கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்படும்.
  • வருடத்திற்கு ஒருமுறை வியாபார திருவிழா நடத்திட சங்கத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய யாரேனும் இயற்கை எழுதினால்
    அவர்கள் குடும்பத்திற்கு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தங்கள் பங்குகளை வழங்கி ஒரு சிறந்த தொகையை அந்த குடும்பத்திற்கு வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • தமிழ்நாடு வணிக நல வாரியத்தில் பதியாதவர்களுக்கு மீண்டும் பதியக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி தரப்படும்.

போன்ற 15 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள், துணைச் செயலாளர், அனைவரும் கூட்டத்தில் சிற்றரையாற்றினர்.

முடிவில் முஹம்மது இலியாஸ் அவர்கள் நன்றியுரை கூறினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 27-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment