30.2 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 22 வது வார்டு உள்ளடக்கிய பரக்கத் நகர் பகுதியை A-zone என்று தரம் உயர்த்தி வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது.

இதன்படி பழைய வரி விதிப்பை விட 200 மடங்கு வரையில் வரிவிதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி உள்ளார்கள்.

கோட்டக்குப்பத்தில் மற்ற பகுதியைவிட எந்த வித சிறப்பு வசதிகளும் இல்லாத நிலைகள் சாதாரண குடியிருப்பு பகுதியாக இருக்கும் பரக்கத் நகர் பகுதியை A zone என்ற தரம் உயர்த்தி (மக்கள் யாரும் கோரிக்கை வைக்காமல்) அதன் அடிப்படையில் வீட்டு வரிகள் சொத்து வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பரக்கத் நகர் பகுதி பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் மேற்படி மக்களின் குறையை நகராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, பரகத் நகர் பகுதியை சாதாரண குடியிருப்பு பகுதியாக அறிவித்து வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி பானுமதி அவர்களிடமும், கோட்டகுப்பம் நகராட்சி தலைவர் திரு ஜெயமூர்த்தி அவர்களிடமும், 15 வார்டு கவுன்சிலர் ஜாக்கிர் உசேன் அவர்களிடமும், 22 வது வார்டு கவுன்சிலர் நாசர் அலி அவர்களிடமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் பொதுமக்கள் சார்பாக பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மனுக்கள் அளித்தார்கள்.

அந்த மனுவில் வரி விதிப்பு உயர்வு சம்பந்தமான கோரிக்கையுடன் பரக்கத் நகரின் முக்கிய பிரச்சனைகளான,

1) சீரான குடிநீர் விநியோகம்

2) சரியான வடிகால் வசதிகளுடன் கூடிய சைடு வாய்க்கால்கள்

3) குண்டும் குழியற்ற தரமான சாலைகள்

4) இதுவரையில் சாலைகள் போடப்படாத பகுதிகளுக்கு புதிய சாலைகள்

5) அனைத்து தெருக்களிலும் மும்முனை இணைப்புடன் கூடிய மின்சார வசதி

6) அனைத்து மின் கம்பங்களிலும் தெருவிளக்குகள் பொருத்துதல்

7) மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை பிடித்தல்

8) சாலைகளில் நடந்து செல்பவரையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சாலைகளை சுற்றித் திரியும் கால்நடைகளை அகற்றுதல்

9) பரக்கத் நகர் பகுதிக்கு என்று தனியான ரேஷன் கடை

10) குப்பைகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறை எடுக்கமல் தினமும் எடுக்க வேண்டும், போன்ற பல முக்கிய கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோட்டகுப்பம் பர்கத் நகர் முத்தவல்லி எஸ். பிலால் முஹம்மது, துணை முத்தவல்லி முகமது ஃபாரூக், செயலாளர் அப்துல் நாசர், துணை செயலாளர் முஹம்மது ஷரீஃப், பொருளாளர் முகமது இப்ராஹிம் முன்னாள் நிர்வாகி அஷ்ரப் அலி மற்றும் பரக்கத் நகர் வாசிகள் உடன் இருந்தார்கள்.

எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லாத பரகத் நகரை, மேற் சொன்ன பல பிரச்சனைகள் இருக்கும் பரக்கத் தகரை A Zone என்று அறிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே மக்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்பகுதியின் வரி விதிப்பை குறைப்பதுடன் மேற்சென்ன அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த மனு மீது மேல் நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதி அளித்துள்ளார்கள்.

மக்களின் இந்த குறைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையில் பரகத் நகர் வாசிகள்!

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

தெருக்களில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு

விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா்

டைம்ஸ் குழு

Leave a Comment