35.2 C
கோட்டக்குப்பம்
April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை.

Kotakuppam Jamiat Nagar area is suffering from sewage flowing in the roads. Request to the municipality to take action

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு கோட்டக்குப்பம் நகராட்சி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி…

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது[புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

Leave a Comment