26.1 C
கோட்டக்குப்பம்
February 2, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும், கரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நேற்றி அறிவுறுத்தியிருந்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் உள்ள எல்லைகள் எந்த நேரத்திலும் அடைக்கப்படலாம்? கோட்டக்குப்பம் D.S.P அஜய் தங்கம் அவர்களின் பேட்டி.

Leave a Comment