கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, நேற்று(13/01/2023) மாலை குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ஹீர் ரன்ஜா ஓட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் ஆலோசகர் ஜனாப் முபாரக் உசேன் அவர்கள் இறைமறையின் திரு வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள்.
ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பொதுச்செயலாளர் ஜனாப். முஹம்மது ரபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றார்கள்.
ஜமாத்தின் தலைமை உரையாக தலைவர் ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜமாத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.
அதற்கடுத்து ஜமாத்தின் துணைத் தலைவர் ஜனாப் முஹம்மது கஜ்ஜாலி, ஜமாத்தின் சிறப்பம்சங்களையும் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்பதை பற்றி எல்லாம் விளக்கமாக எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்டம் எப்படி செயல்படுகின்றது என்பதனை பற்றி சிறு சேமிப்பு திட்டத்தின் பொறுப்பாளர் ஜனாப். இக்பால் பாஷா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
ஜமாத்தின் whatsapp தளம் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி ஊடக செயலாளர் ஜனாப் சையத் சாதிக் அவர்கள் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.
ஜமாஅத் கடந்த வருடங்களில் என்னென்ன செயல் திட்டங்களை நமது ஊருக்கும் நமது உறுப்பினர்களுக்கும் செய்திருக்கிறோம் என்பதை பற்றி மிக விளக்கமாக ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் முஹம்மது ஆரிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அடுத்து இந்த ஆண்டின் ஆண்டறிக்கையை அதாவது வரவு செலவு கணக்கை ஜமாத்தின் துணை பொருளாளர் ஜனாப். குத்தூஸ் அவர்கள் உறுப்பினர் மத்தியிலே வாசித்துக் காட்டினார்.
அழகிய கடன் திட்டத்தை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது, அதன் நோக்கம் என்ன என்பதை பற்றி எல்லாம் ஜமாஅத்தின் நிர்வாகி ஜனாப் இப்ராஹிம் கலிபுல்லாஹ் அவர்கள் எடுத்துரைத்தார்.
முக்கிய நிகழ்வாக ஜமாத் ஆரம்பித்த நாளிலிருந்து இந்த ஜமாத்திற்காக பாடுபட்ட பல நிர்வாகிகளுக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்திலே இந்த ஆண்டு 6 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஜமாத் சார்பாக கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவிக்கப்பட்ட ஜமாத் நிர்வாகிகளின் பெயர்கள்
- முஹம்மது ஆரிப்
பொருளாளர - முஹம்மது ரபீக்
பொதுச்செயலாளர் - இக்பால் பாஷா
சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் - சையத் சாதிக்
ஊடக செயலாளர் - நூருல் அமீன்
அழகிய கடன் உதவி திட்ட பொறுப்பாளர் - நிஜாமுதீன்
செயற்குழு உறுப்பினர்
இறுதியாக ஜனாப் நூருல் அமீன் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிகழ்ச்சி நிறையுற்றது.
பெருவாரியான உறுப்பினர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.