கோட்டக்குப்பம் பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முத்தவல்லி S. பிலால் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது கொடியேற்றி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளியின் இமாம் அக்பர் சாதிக் சலாஹி அவர்கள் கிராத் ஓதி அனைவரையும் வரவேற்றார்கள்.
இந்த நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U.முகம்மது பாரூக், ஜாமிஆ மஸ்ஜித் துணை செயலாளர் ஹாஜி A.K. பஷீர் அகமது, துணை முத்தவல்லி ஹாஜி K.R. அப்துல் ரவூப், முன்னாள் கவுன்சிலர் K. நஜீர், புஸ்தானிய பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி V.R. முஹம்மது இப்ராஹிம், புஸ்தானியா பள்ளிவாசல் முன்னாள் மூத்தவல்லி ஹாஜி M.I.அப்துல் ஹக்கீம் முஜீப், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் A.அமீர் பாஷா மற்றும் பலர் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் மாணவச் செல்வங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பரக்கத் நகர் பள்ளிவாசல் துணை முத்தவல்லி L. முகம்மது பாரூக், பொருளாளர் S. முகமது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இறுதியில் பள்ளியின் செயலாளர் K.அப்துல் நாசர் அவர்கள் நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி இனிதுற்றது.