தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19-03-2023) ஜமியத் நகர், கமால் தோப்பில் உள்ள தவ்ஹீத் மர்கஸ் அருகில் உள்ள திடலில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்களுக்கான மாபெரும் ஒரு நாள் இஜ்திமா நடைபெற்றது.
இதில் ஏராளமான தாய்மார்களும், சகோதரிகளும், சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.
இதில் வரதட்சணையை ஆதரிப்பது மணமகன் வீட்டாரா? அல்லது மணமகள் வீட்டாரா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் பேச்சாளர் பயிற்சி வகுப்பு மாணவிகளால் நடைபெற்றது. சஹாபிய பெண்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் ஜெசிமா யாஸ்மின் ஆலிமா அவர்களும், திசை மாறும் தீன்குல பெண்கள் என்ற தலைப்பில் தஸ்லிமா ஆலிமா அவர்களும் நபி வழி திருமணத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் சுஜா அலி MISc அவர்களும், மேலும் நவீன உலகில் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் முஹம்மது யூசுப் MISc அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.