கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை சூரத் மாவட்ட தலைமை நீதிபதி எச். எச். வர்மா விசாரித்து அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வைத்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(23/03/2023) கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் விவசாய அணி சார்பில் நகர தலைவர் திரு. U. முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில், விவசாய மாவட்ட தலைவர் M.I. அப்துல் ஹக்கீம் முன்னிலையில் நகர கமிட்டி நிர்வாகிகள் முகமது முபாரக், ஆதி ராமன், இஸ்மாயீல், AKஅஹமதுல்லா, நசீர் பாஷா, ரஹ்மத்துல்லா, MT அன்சாரி, பாலசுந்தரம், சுந்தரமூர்த்தி, Z அகமதுல்லா, சபீர் அஹமத், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் இஸ்மத் அலி, அர்ஷத் அஹமத், இமனா சையித், மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் A. அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டக்குழு உறுப்பினர் A. அன்சாரி பங்கேற்று, பிஜேபி அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
கோட்டக்குப்பம் காவல்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து, பிறகு விடுவித்தனர்.