34.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

பிறகு, ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் இளைஞர்கள் எப்படி செயல் பட வேண்டும் என சிறப்பு பயான் செய்தார். அதன்பின், நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்: வரலாறு காணாத மழையால் மக்கள் தவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment