கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் பாரம்பரிய வரலாற்று கண்காட்சி, மதரஸா ஆண்டு விழா, பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு, புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா மற்றும் 10, 12-ம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய உள்ளடக்கிய ஐம்பெரும் விழா நாளை மே 27, 28 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பர்கத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியின் முதலாவதாக, நமது வரலாற்று மற்றும் கடந்த காலத்தின் பழைய அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்தும் “கோட்டக்குப்பம் பாரம்பரியம் கண்காட்சி“, நாளை காலை 9 மணி அளவில் பர்கத் நகர் 9-வது கிராஸ் பழைய மதரசா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 9: 30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மதரசா ஆண்டு விழா மற்றும் மாலை 6:45 மணி முதல் 7 45 மணி வரை காயல்பட்டினம் ஆலிமா M.A.S. முத்து கதீஜா அவர்களின் சிறப்புரை ஆற்றும் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி அளவில் சென்னை பாலவாக்கம் மௌலானா A.U. அபூபக்கர் அவர்களின் சிறப்புரை ஆற்றும் மதரசா புதிய கட்டிட திறப்பு விழா. நிகழ்வின் முடிவில் மதியம் 1:00 மணி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.