28.2 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – S. ஜெயஸ்ரீ சுகுமார் மற்றும் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் – M. ஸ்டாலின் சுகுமார் ஆகியோர் மாணவ/மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 7000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். அதேபோல், இரண்டாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 5000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ். மேலும், மூன்றாம் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ₹ 3000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவானது வரும் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு, சின்ன கோட்டக்குப்பம் கன்னிக்கோயில் தெரு, தோப்புத் தெரு சந்திப்பில் நடைபெறவுள்ளது.

இதில் சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், இந்த வருடம் தேர்வு எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 460 மேல் மதிப்பெண் பெற்றவர்களும், அதே போல் 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் 550 மதிப்பெண் மேல் பெற்றிருக்கும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் online-ல் பதிவிறக்கம் செய்த சான்றிதழை அனுப்பலாம்.

தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை (MARK SHEET) நேரிலோ அல்லது கீழ் காணும் வாட்ஸ் அப் நம்பரிலோ அனுப்பி வைக்கலாம்.

வாட்ஸ் அப் எண்
9894781803, 9629400468

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிகளில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று.

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

Leave a Comment