32.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இன்று (07/08/2023) முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு கருநணாநிதியின் 5-வது நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M.ஸ்டாலின் சுகுமார் ஏற்பாட்டில் கோட்டக்குப்பம் திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், 14-வது வார்டு தி.மு.கழகத்தை சார்ந்த 3 குடும்பத்திற்கு தலா ரூ. 2500 ரூபாய் விதம், மொத்தம் 7500 ரூபாய் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு தலா ரூ. 500 ரூபாய் விதம், மொத்தம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு கோட்டக்குப்பம் நகர திமுகவினர் மற்றும் 14-வது வார்டு திமுகவினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு.

டைம்ஸ் குழு

விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் 24,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: மாவட்ட ஆட்சியா்

டைம்ஸ் குழு

ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா

Leave a Comment