29 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி

கோட்டக்குப்பம் பரகத் நகர், அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (15.08.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் பிலால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார்கள். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது தேசிய கொடி ஏற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U.முகமது ஃபாருக், செயலாளர் ஹாஜி N. பஷீர் அஹமது, துணை செயலாளர் ஹாஜி A.K. பஷீர் அகமது, துணை முத்தவல்லி ஹாஜி K.R. அப்துல் ரவூப், ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லிகள் ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஹாஜி A. பக்ருதீன் ஃபாரூக், ஹாஜி A.முஹம்மது பாரூக், முன்னாள் கவுன்சிலர் K. நஜீர், புஸ்தானியா மஸ்ஜித் செயலாளர் ஹாஜி V.R. முஹம்மது இப்ராஹிம், புஸ்தானியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஹாஜி M.I.அப்துல் ஹக்கீம் (முஜீப்), ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் A.அமீர் பாஷா, அபூதாஹீர், ஹாஜாத் அலி ஆகியோர் ஊர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்திகள், இந்திய சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் நிர்வாகிகள் பொருளாளர் S.முகமது இப்ராஹிம், துணை முத்தவல்லி L. முகமது பாரூக், துணை செயலாளர் E. முஹம்மது ஷரீப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பள்ளிவாசலின் செயலாளர் K. அப்துல் நாசர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், மதரசா மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

டைம்ஸ் குழு

பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

Leave a Comment