விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மருத்துவர் வினோ பாரதி அவர்களின் ஏற்பாட்டில்,
கோட்டக்குப்பம் தந்திரயான்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(15/09/2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சுகாதார நிலைய பொறுப்பாளர், மருத்துவர், செவிலியர்களிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.