Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்ததை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் கோட்டக்குப்பம் பகுதியை 27 வார்டுகளாக பிரித்து முதல் நகராட்சி தேர்தல் நடைபெற்று.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றது. பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அதற்கேற்ற உட் கட்டமைப்புகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய நகராட்சி அலுவலக கட்டுவது என்று அரசால் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது நகர் மன்ற தலைவர் திரு ஜெயமூர்த்தி அவர்கள் சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு என்று புதிய கட்டிடம் கட்டப்படும். அந்தக் கட்டிடம் தற்போதைய அலுவலகம் எதிரே அமைந்துள்ள நகராட்சி திடலில் கட்டப்படும் என்றும் சுதந்திர தின விழாவில் பொது அறிவிப்பாக அறிவித்தார்கள்.

அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் நகராட்சி திடலிலேயே கட்டுவது என்பதாக அமைந்திருக்கும் நிலையில், நகர மன்ற தலைவரும் பொது அறிவிப்பு செய்து விட்ட நிலையில், தற்பொழுது நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்காக நகராட்சி ஆணையர் மூலம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றது.

பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக நகர் மன்ற தலைவர் அரசு விழாவில் பொது அறிவிப்பாக அறிவித்த நிலையில் தற்போது வேறு இடத்தில் கட்டுவதற்கு முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது.

பெரும்பாலான பொது மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மற்றும் பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கும் நிலையில் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதை உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து மக்களின் விருப்பப்படி நகராட்சி எதிரில் உள்ள இடத்தில் நகர மன்ற அலுவலகத்தை கட்ட வேண்டும் என்று கோட்டக்குப்பம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர்மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோட்டக்குப்பம் நகர இந்தியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி இஹ்சனுல்லாஹ், நகர செயலாளர் முஹம்மது ஃபாருக், மாநில STU தொழிலாளர் அணி பொதுச் செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட அமைப்பு செயலாளர் பிலால் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி

டைம்ஸ் குழு

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்).

டைம்ஸ் குழு

குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது.

டைம்ஸ் குழு

Leave a Comment