23.3 C
கோட்டக்குப்பம்
November 25, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி.

கோட்டக்குப்பம், பரகத் நகர், அல்மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிவாசல் முத்தவல்லி S.பிலால் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் E. அப்துல் ஹமீது தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U. முஹம்மது பாரூக், செயலாளர் N.பஷீர் அகமது, துணைமுத்தவல்லி K.R.அப்துல் ரவூப், முன்னாள் மூத்தவல்லி A.இஹ்சானுல்லாஹ், முன்னாள் கவுன்சிலர் K.நஜீர், முன்னாள் புஸ்தானியா முத்தவல்லி M.I.அப்துல் ஹக்கீம் முஜீப், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் A.அமீர் பாஷா, ரப்பானியா அரபிக் கல்லூரி தலைவர் O.அஷ்ரப் அலி, பரகத் நகர் முன்னாள் முத்தவல்லி A.K.பஷீர் அகமது மற்றும் பலர் குடியரசு தின வாழ்த்துச் செய்திகளை வழங்கினார்கள்.

முன்னதாக பள்ளிவாசல் பிலால் அப்துல் கபூர் அவர்கள் இறை வசனம் ஓதி துவங்கினார்கள். இறுதியாக பள்ளிவாசல் செயலாளர் A.K.அப்துல் நாசர் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

இந்நிகழ்வில் ஊரின் முக்கிய பிரமுகர்கள், பரகத் நகர் ஜமாத்தார்கள், மதரசா மாணவர்கள் பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு

Leave a Comment