கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் முத்து சிங்காரம் நகரில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கு 15 -வது நிதி குழு மானியத்தின் கீழ் 1 கோடி 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை இன்று (07/02/2024) புதன்கிழமை நடைபெற்றது.
நகர் மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்த பூமி பூஜையில் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத் முபாரக், நகராட்சி ஆணையர் புகேந்திரி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நகர சுகாதார மையத்தில் அவசர சிகிச்சை பிரிவுடன் படுக்கை வசதியுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகள் பிரிவும் அமைய உள்ளது. இதேபோல், பெரிய முதலியார்சாவடி குயிலாபாளையம் அருகே மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியுடன் புதிய குடிநீர் குழாய் அமைக்க நகராட்சி மூலதனம் மானிய நிதி திட்டம் மூலம் 2 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜையம் நகர மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.