35.2 C
கோட்டக்குப்பம்
April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் வெள்ளிக்கிழமை(09/02/2024) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் கலிலுல்லாஹ் இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

ஜமாத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹபிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகிய கடன் திட்ட பொறுப்பாளர் முஹம்மது ரபீக் வரவேற்புரை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றார்.

ஜமாத்தின் தலைமை உரையாக தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஜமாத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார். ஜமாத்தின் பொதுச்செயலாளர் முஹம்மது கஜ்ஜாலி ஜமாத்தின் சிறப்பம்சங்களையும் பற்றி எடுத்துரைத்து 2024- 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.

கடந்த வருடம் (2023) என்னென்ன செயல் திட்டங்களை பற்றி விளக்கமாக ஜமாத்தின் பொருளாளர் முஹம்மது ஆரிப் உரை நிகழ்த்தினார். இந்த ஆண்டின் ஆண்டறிக்கையை ஜமாத்தின் துணை பொருளாளர் குத்தூஸ் உறுப்பினர் மத்தியில் வாசித்துக் காட்டினார்.

சிறுசேமிப்பு திட்டத்தை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது, அதன் நோக்கங்கள் பற்றி ஜமாஅத்தின் சிறுசேமிப்பு திட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் கலிலுல்லாஹ் எடுத்துரைத்தார்.

இறுதியாக சையத் சாதிக் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், பெருவாரியான குவைத் ஜமாத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ஆதார் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம். பகுதி – 2

டைம்ஸ் குழு

Leave a Comment