25.1 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரத்தை வழங்கிடவும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(18/05/2024) மாலை நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முஹம்மது சல்மான் ஃபார்ஸி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது இலியாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது அன்சாரி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஜிபுர் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார். அவர் பேசியபோது, “மக்களின் அடிப்படை தேவையான மின்சாரத்தை கூட இப்பகுதிக்கு வழங்க முடியாத ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மின்வாரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்களின் அலட்சியப் போக்கை கண்டித்தும், மேலும் சீரான மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டி இப்பகுதி மக்கள் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை சீரான மின்சாரத்தை வழங்காதது ஏன், என கேள்வி எழுப்பினார். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் எனவும், இதற்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்” எனவும் கூறினார்.

மேலும், தமிழக அரசின் மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பதாகை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்திற்கு, ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி புதிய அலுவலகத்தை காட்டு அய்யனார் கோவில் இடத்தில் கட்ட அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் அனைத்து பள்ளிகள் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பு…

Leave a Comment