April 7, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்)

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் இன்று (30/11/2024) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கோட்டக்குப்பம் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிா்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போதும், அதன் பின்னா் சில மணி நேரங்கள் வரையிலும், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பின் அவசர உதவி:

புயல் பாதிப்பால் ஏற்படும் அவசர சூழ்நிலைகளில் கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு பகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் இந்த பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம். பொறுப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

Leave a Comment