Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

ஃபெஞ்சல் புயல் தீவிரம்: கோட்டக்குப்பதில் மீண்டும் மின் விநியோகம் எப்போது?

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் கோட்டக்குப்பம் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி கோட்டக்குப்பம் முழு பகுதியிலும் இன்று மாலை முதலே மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்துள்ளதால், மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் எப்போது கிடைக்கும்?

புயலின் தாக்கம் நாளை காலை வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மின் விநியோகம் நாளை காலை சரி செய்யும் பணிகள் தொடங்கி, பிற்பகல் முதல் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

Kottakuppam Times-ஸின் இணையதள செயலி(APP) வெளியீடு

கோட்டக்குப்பத்தில் E.B-பில் அதிகப்படியாக கணக்கிடப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

Leave a Comment