ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜமீயத் நகர் மற்றும் பர்கத் நகர் பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இன்று(07/12/2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பேராசிரியர், அவர்களது துயரத்தில் பங்குகொண்டார். மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் இப்பகுதிகளில் நிரந்தரமான வடிகால் வசதியும் சீரான குடிநீர் வழங்கக்கூடிய அமைப்புகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் நகராட்சி நிர்வாகத்திதையும் வலியுறுத்தினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் லீக்கினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.