21.7 C
கோட்டக்குப்பம்
January 22, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் நடத்திய முப்பெரும் விழா.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் சார்பில் முப்பெரும் விழா இன்று செவ்வாய்க்கிழமை(14/01/2024) காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் திருக்குர்ஆன் துவக்க விழா, திருக்குர்ஆன் விளக்கக் கூட்டம் மற்றும் திருக்குர்ஆன் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

தீனியாத் சென்டர், அன்வாருஸ் ஸூஃப்பா தீனியாத் மக்தப் தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி, மஸ்ஜிதுகள் மற்றும் பெண்களுக்கான மதரஸாக்கள் உட்பட மொத்தம் 20 மதரஸாக்களை முறைப்படி நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி கற்று பயனடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மக்தப்களையும் ஒன்றிணைத்து, திருக்குர்ஆன் துவங்கும் மற்றும் நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி சென்டர் அளவில் நடத்தப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டு, 128 மாணவ-மாணவிகள் திருக்குர்ஆன் தொடங்கியுள்ளனர். மேலும், 75 மாணவ-மாணவிகள் திருக்குர்ஆனை முழுமையாக நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முப்பெரும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், மக்தப் உஸ்தாத், உஸ்தாபிகள், மக்தப் பொறுப்பாளர்கள் மற்றும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் சகோதரர்கள் சார்பில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஹதியா வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment